மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

திருச்சியில் வீடு விற்பனைக் கண்காட்சி!

திருச்சியில் வீடு விற்பனைக் கண்காட்சி!

திருச்சியில் 3 நாட்கள் வீடு விற்பனைக் கண்காட்சி நடத்தவுள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கம் (கிரெடாய்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரெடாய் ஃபேர்புரோ 2019 என்ற பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் அமைந்துள்ள சங்கம் ஓட்டலில் ஜனவரி 11ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குச் வீடு விற்பனைக் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் வீடு வாங்குவோரிடம் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடாக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகவுள்ள சொத்துகள் குறித்து இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கெடுக்கிறார்கள். 30 ஸ்டால்கள் அமைக்கப்படும் என்றும், கண்காட்சியில் பங்கேற்பவர்கள் வீடு வாங்க விரும்பினால் அந்த இடத்திலேயே அவர்களுக்குக் கடனுதவி வழங்கும் விதமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளின் ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிரெடாய் தலைவர் எஸ்.ஆனந்த் டி.என்.என். ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

நகரின் பல்வேறு பகுதிகளில் 50 கட்டுமான நிறுவங்களின் திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையாகும்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon