மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

வீடு விற்பனை உயர்வு!

வீடு விற்பனை உயர்வு!

விலை குறைவு காரணமாக 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் வீடு விற்பனை குறித்த விவரங்களைச் சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய ஆறு நகரங்களில் வீடு விற்பனை உயர்ந்துள்ளதாகவும், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் விற்பனை சரிவைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வீடு விற்பனை உயர்ந்துள்ளதால் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 11 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது 4.7 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

முன்னதாக ஜேஎல்எல் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 சதவிகிதம் உயர்ந்திருந்ததாகத் தெரிவித்திருந்தது. அதேபோல, அனராக் பிராப்பர்டி நிறுவனம் 16 சதவிகிதமும், பிராப் டைகர் நிறுவனம் 25 சதவிகிதமும் வீடு விற்பனை உயர்ந்திருந்ததாகத் தெரிவித்திருந்தன. சுற்றுச்சூழல் விதிமுறைகள் தளர்வு, விலை குறைப்பு, மறைமுகச் சலுகைகள் உள்ளிட்ட காரணிகளால் வீடு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளதாக நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனம் கூறுகிறது.

2018ஆம் ஆண்டில் மொத்தம் 2,42,328 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 2,28,072 ஆக இருந்தது. இந்திய நகரங்களிலேயே அதிகபட்சமாக பெங்களூருவில் வீடு விற்பனை 27 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon