மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சணல் ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா!

சணல் ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா!

2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இந்தியாவின் சணல் ஏற்றுமதி 24 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கைவினைக் கலைஞர்கள் மற்றும் சணல் பொருட்களுக்கான கண்காட்சி கொல்கத்தாவில் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி கலந்துகொண்டு பேசுகையில், “பல்வேறு வகைப்பட்ட சணல் பொருட்கள் ஏற்றுமதி 2014ஆம் ஆண்டிலிருந்து 24 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. சணல் ஏற்றுமதியாளர்கள் அரசிடமிருந்து கிடைக்கும் ஆர்டர்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. பல்வேறு சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றும் வகையில் பல்வேறு வகையான சணல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகமாகக் கிடைக்கும்.

இந்தியாவின் சணல் உற்பத்தித் துறையில் நேரடியாக சுமார் 3.7 லட்சம் ஆலைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, லட்சக்கணக்கான விவசாயிகளும் இத்துறையைச் சார்ந்திருக்கின்றனர். எனவே, அரசிடமிருந்து ஆர்டர் கிடைத்தவுடன் முதலில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாக்கித் தொகையைச் செலுத்திவிட வேண்டும்” என்று ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon