மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கண்காணிக்கக் குழு!

டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கண்காணிக்கக் குழு!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க சிறப்புக் குழு ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலிருந்தே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்காக சிறப்புச் சலுகைகள் வழங்குவது, கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் மயத்தின் வாயிலாக நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து பேர் கொண்டு சிறப்புக் குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. அதன் தலைவராக ஆதார் அமைப்பின் முன்னாள் தலைவரான நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நிலவரம், அதில் உள்ள குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றில் இக்குழு முழுக் கவனம் செலுத்தும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்வது என்பதற்கான கொள்கைகளையும் இக்குழு பரிந்துரை செய்யும். இக்குழுவின் முதல் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து 90 நாட்களுக்குள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான தனது அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஹெச்.ஆர்.கான், விஜயா பேங்க் முன்னாள் நிர்வாக இயக்குநர் கிஷோர் சன்சாய், தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் அருணா ஷர்மா, கண்டுபிடிப்பு மையத்தின் முதன்மை கண்டுபிடிப்பு அதிகாரி சஞ்சய் ஜெயின் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon