மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

எதிர்மறை எண்ணங்களை என்ன செய்யலாம்?

யாருக்காவது கோபம் ஏற்பட்டால், அவர் கோபமில்லாத செயல் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்னும் பழக்கம் ஜப்பானில் இருக்கிறது.

அப்படிச் செய்தால் என்ன நடக்கும்? இதுவரை கோபத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஆற்றலானது இப்போது கோபமின்மைக்குச் செல்கிறது.

ஒருவர் மீது உங்களுக்குக் கோபம் வந்து அவரை அடிக்க வேண்டும் என்று தோன்றினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து, என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.

அடிக்க விரும்பினீர்கள் - அது கோபம். பூவைக் கொடுத்தீர்கள் - அது கோபமில்லாத செயல். அடிப்பதற்காகப் பயன்பட இருந்த ஆற்றல், பூ கொடுக்கப் பயன்படுகிறது.

ஆற்றல் நடுநிலைமையானது. ஏதாவது ஒன்று செய்யாவிடில் நீங்கள் ஆற்றலை அடக்கி வைக்கிறீர்கள் என்று பொருள். அடக்கிவைப்பதே நஞ்சு. ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். ஆனால், நேர்மறையாகச் செய்யுங்கள். உங்கள் உணர்ச்சி உங்களை எதிர்மறையாகச் செயல்புரியத் தூண்டினால், அதற்கு எதிரானதைச் செய்யுங்கள்.

எதிர்மறைக்கு எதிராக என்பதும் மோதல்தானே, அதுவும் நம்மைக் கட்டுப்படுத்தும் தளைதானே என்ற கேள்வி எழலாம். இது புதிய தளை அல்ல. பழைய தளையை நீக்கவே இது. பழையது மறைந்ததும் முடிச்சுகள் மறைந்ததும் இதுவும் மறைந்துபோகும். அதன்பின் எதையும் செய்ய நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் இயல்புக்கு ஏற்ப இயங்க முடியும்.

முந்தைய பகுதி : வாழ்வெனும் சாக்லேட் பெட்டி!

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon