மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வீடு வாங்குவது எளிமையானதா?

வீடு வாங்குவது எளிமையானதா?

கடந்த 5 ஆண்டுகளில் வீடு வாங்குவதற்கான விலைகள் எளிமையடைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 31ஆம் தேதியன்று நிதி நிலைத்தன்மை அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘அதிக அளவிலான வீட்டுக் கடன்கள் மற்றும் வங்கிகளின் சிறந்த வட்டி விகிதங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் வீடு வாங்குவதற்கான விலைகள் எளிமையடைந்துள்ளது. 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் அகில இந்திய அளவிலான வீட்டு விலை குறியீடு 5.3 விழுக்காடும், வீட்டுக் கடன் குறியீடு 15.8 விழுக்காடும் சரிந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 7 முக்கிய நகரங்களில் 2018ஆம் ஆண்டு வீடுகள் விற்பனை 47 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சொத்து ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல். இந்தியா தனது ஆய்வறிக்கையில் மதிப்பிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வீடுகள் விற்பனையில் வளர்ச்சி காணப்படும் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது. விற்கப்படாத வீடுகளின் விகிதம் மும்பையில் 25ஆகவும், கொல்கத்தாவில் 18ஆகவும், தேசியத் தலைநகர் பகுதிகளில் 10ஆகவும், பெங்களூர் மற்றும் சென்னையில் தலா 40ஆகவும், அகமதாபாத்தில் 45க்கு சற்று அதிகமாகவும், ஹைதராபாத்தில் 70ஆகவும் உள்ளது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon