மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

விஸ்வாசம்: சர்வதேச வியாபாரம்!

விஸ்வாசம்: சர்வதேச வியாபாரம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் மற்ற பண்டிகைகளைக் காட்டிலும் இதில் படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால், இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்பதால் இந்த ஆண்டு படங்களுக்கு இடையேயான போட்டி ருசிகரமாக இருக்கிறது.

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் திரையரங்குகளைக் கைப்பற்றும் பணிகள் கிட்டதட்ட நிறைவுற்ற நிலையில் சர்வதேச அளவில் இதன் வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டில் படத்தை ‘ஸ்பேஸ் பாக்ஸ்’ என்ற நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்தத் தகவலை அந்நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஸ்வாசம் படத்துடன் தெலுங்கில் ராம்சரண், கிரா அத்வானி, விவேக் ஓபராய், பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘விநாயா வித்யா ராமா’ என்ற படமும் வெளியாவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படத்தை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. முதன்முறையாக ரஷ்யாவில் அதிக நகரங்களில் வெளியிடப்படும் தமிழ்ப் படம் என்ற சாதனையையும் விஸ்வாசம் படைத்துள்ளது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon