மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 நவ 2019

பழைய போன்களுக்கு இனி வாட்சப் கிடையாது!

பழைய போன்களுக்கு இனி வாட்சப் கிடையாது!

பழைய ஓ.எஸ்-களில் இயங்கும் போன்களில் இனி வாட்சப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 1) முதல் சில பழைய போன்களுக்கு வாட்சப் மெசஞ்சர் செயலி வேலை செய்யாது. நோக்கியா நிறுவனத்தின் பழைய எஸ்40 ஒஸ்-இல் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலுல் வாட்சப் செயலி ஏற்கெனவே இயங்குவதில்லை. எனினும் சில பழைய ஓ.எஸ்-களில் வாட்சப் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் சில போன்கள் இனி வாட்சப் செயலியின் முழு அம்சங்களையும் பயன்படுத்த முடியும் என்றாலும், மற்ற ஒ.எஸ்-களில் இயங்கும் போன்களை பயன்படுத்துவோர் வாட்சப்பை முழுமையாக பயன்படுத்த முடியாது. உதாரணமாக வாட்சப் சாட் ஹிஸ்ட்ரி போன்றவற்றை சேமித்து வைக்க முடியாது.

எந்தெந்த போன்களில் இனி வாட்சாப்பை முழுமையாகவும், பாதி அம்சங்களுடனும் பயன்படுத்த முடியாது? நோக்கியா எஸ் 40 ஓ.எஸ்-இல் இயங்கும் நோக்கியா ஆஷா 201, ஆஷா 500, ஆஷா 501, ஆஷா 502, ஆஷா 205, ஆஷா 210, ஆஷா 230, நோக்கியா 208, ஆஷா 503, நோக்கியா 515, நோக்கியா 206 ஆகிய போன்களில் இனி வாட்சப்பை பயன்படுத்த முடியாது. மேலும், நோக்கியா சிம்பியன் எஸ் 60 ஓ.எஸ்-இல் இயங்கும் போன்களிலும் வாட்சப் இயங்காது. ஆண்டிராய்டு 2.3.7 ஓஸ்-இல் இயங்கும் போன்களில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாட்சப் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon