மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாஷ் ராஜ்

நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாஷ் ராஜ்

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசியலில் அதீத நாட்டம் கொண்டவர் பிரகாஷ் ராஜ். அரசியல்வாதிகள் பலரையும், பல சமயங்களில் விமர்சனம் செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். அப்போதெல்லாம், நீங்கள் தேர்தலில் நில்லுங்கள் என்ற கேலிக்கு ஆளானார். அப்போதுகூட, இப்படியொரு அறிவிப்பை பிரகாஷ் ராஜ் அறிவிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ள பிரகாஷ் ராஜ் “உங்கள் ஆதரவுடன் இந்த பொறுப்பை நான் ஏற்கிறேன். எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பது குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon