மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது

மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது

இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஸ்ம்ருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் சிங் கௌர் ஆகியோர் 2018ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ம்ருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டின் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆட்டக்காரர், ஒருநாள் போட்டிகளின் சிறந்த ஆட்டக்காரர் ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய டி-20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கௌர் 2018ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிசா ஹீலி ஆண்டின் சிறந்த டி-20 ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டு விருதுகளைப் பெற்றுள்ள ஸ்ம்ருதி மந்தனா, கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 669 ரன்கள் குவித்து (சராசரி 66.90) ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். டி-20 போட்டிகளில் 622 ரன்களைக் குவித்து (ஸ்ட்ரைக் ரேட் 130.67) மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மந்தனாவுக்கு முன்பு ஆண்டின் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்ற இந்தியர் ஜுலான் கோஸ்வாமி. இவர் 2007இல் இவ்விருதைப் பெற்றார்.

2018ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியில் மந்தனா இடம்பெற்றுள்ளார். இவரைத் தவிர, இந்தியாவிலிருந்து பூனம் யாதவும் இடம்பெற்றுள்ளார். இந்த அணியின் கேப்டன் நியூஸிலாந்தைச் சேர்ந்த சூஸி பேட்ஸ்.

2018ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங். இவ்வணியில் இந்தியாவிலிருந்து ஸ்ம்ருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.

2018ஆம் ஆண்டுக்கான விருதுகளின் முக்கிய அம்சங்கள்

சிறந்த ஆட்டக்காரர் (ICC Women's Cricketer of the Year): ஸ்ம்ருதி மந்தனா.

சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் (ICC Women's ODI Player of the Year): ஸ்ம்ருதி மந்தனா.

சிறந்த டி-20 ஆட்டக்காரர் (ICC Women's T20 Player of the Year): ஸ்ம்ருதி மந்தனா.

ஐசிசி ஒருநாள் அணி கேப்டன்: சூஸி பேட்ஸ்

ஐசிசி டி-20 அணி கேப்டன்: ஹர்மன்ப்ரீத் சிங் கௌர்

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon