மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

சென்னை: தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் திட்டம்!

சென்னை: தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் திட்டம்!

சென்னை மாநகராட்சிக்கான தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க ரூ.86 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்திகரித்துப் பயன்படுத்த சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ள முறையைக்கொண்டு நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகர தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் டி.என்.என். ஊடகத்திடம் பேசுகையில், “14 விழுக்காட்டுக்கும் குறைவான தண்ணீர் உள்ள நீர்நிலைகள் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சுத்திகரிக்க வாய்ப்புகள் உள்ளது. சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ள சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்தி நீர்நிலைகள் சுத்திகரிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளோம். இந்த முறையைப் பின்பற்றுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுவதுடன், நிலையான நீர் ஆதாரமும் உருவாகும்” என்றார்.

வற்றாத தண்ணீர் இருப்பை சென்னை மாநகராட்சிக்கு ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கானப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பணிகளுக்கு ரூ.86.69 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 70 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியின் தேவையோ 850 மில்லியன் லிட்டராக உள்ளது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon