மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

அட்டைக் களமல்ல, வீரர்களின் ஆடுகளம்!

அட்டைக் களமல்ல, வீரர்களின் ஆடுகளம்!

பாரதிராஜா, சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் 'கென்னடி கிளப்’ திரைப்படம் பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது. பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்துக்காக இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடிப் போட்டி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகளைக் காட்சிப்படுத்தி, இப்படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். இதுதவிர, மும்பை மற்றும் அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றுள்ள கென்னடி கிளப் டீம், சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இது பற்றி பேசும் படக்குழுவினர் “25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக 'செட்' அமைத்து மைதானம் தயார் செய்துள்ளோம். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்குவோம்.

இதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்தப்போகிறோம். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.

அதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக 'செட்' அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெறும்.

” என்று கூறுகின்றனர்.

சீன மொழியில் டப்பிங் செய்வதற்கான உரிமத்தை ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரமாகிவிட்ட இத்திரைப்படம், தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon