மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இன்றுடன் காலாவதியாகும் ஏடிஎம் கார்டுகள்!

இன்றுடன் காலாவதியாகும் ஏடிஎம் கார்டுகள்!

பழைய வகை மேக்னெடிக் ஸ்ட்ரைப் ஏடிஎம் கார்டுகள் இன்றுடன் காலாவதியாகின்றன.

நீங்கள் பழைய ஏடிஎம் கார்ட் அல்லது கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் உடனடியாக உங்களது வங்கியை அணுக வேண்டும். ஏனெனில், பழைய மேக்னடிக் ஸ்ட்ரைப் பொறித்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று (ஜனவரி 1) முதல் செயலற்றுப் போகும். கடந்த 2015ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், மேக்னடிக் ஸ்ட்ரைப் வகை கார்டுகள் பயன்பாட்டை நாடு முழுவதும் நிறுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், மேக்னெடிக் வகை கார்டுகளை குற்றவாளிகள் எளிதில் தவறாக பயன்படுத்தக்கூடும்.

ஆக, 2018ஆம் ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து மேக்னெடிக் ஸ்ட்ரைப் கார்டுகளையும், நவீன இ.எம்.வி வகை கார்டுகளாக மாற்றும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வங்கிகளும் பழைய கார்டுகளை கொடுத்து புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளும்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தின. உங்கள் கார்டு புதிய இ.எம்.வி வகை கார்டு என்பதை எப்படி கண்டறிவது? கார்டின் இடப்புறத்தில் மொபைல் சிம் கார்டு போன்ற சிறிய கார்டு இருந்தால் நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பது இ.எம்.வி கார்டு ஆகும். அதை மாற்றத் தேவையில்லை. இல்லாவிட்டால் வங்கியை அணுகி மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon