மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ப்ரசண்ட்க்கு பதிலாக ஜெய்ஹிந்த்!

ப்ரசண்ட்க்கு பதிலாக ஜெய்ஹிந்த்!

குஜராத்தில் உள்ள பள்ளிகளில் இனி வருகைப் பதிவின் போது உள்ளேன் ஐயா, ப்ரசண்ட் சார்/மிஸ் என்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறவேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில பள்ளிக் கல்வித் துறை, அனைத்துப் பள்ளிகளுக்கு நேற்று (டிசம்பர் 31) அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும், ஜனவரி 1 ஆம் தேதி முதல், வருகை பதிவின் போது உள்ளேன் ஐயா, ப்ரசண்ட் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் அல்லது ஜெய்பாரத் என்றுதான் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவ மாணவிகளிடம் நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்வதற்காக இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலும், இதேப்போன்று பள்ளிகளில் வருகைப்பதிவை பதிவுசெய்யும்போது, ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon