மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

புத்தாண்டில் சிலிண்டர் விலைக் குறைப்பு!

புத்தாண்டில் சிலிண்டர் விலைக் குறைப்பு!

புத்தாண்டின் முதல் நாளிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் எரிவாயுக்களின் விலை வீழ்ச்சி மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் நிலை போன்ற காரணங்களால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஓசி. நேற்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 1 முதல் டெல்லியில் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை 120.50 ரூபாயும், மானிய சிலிண்டரின் விலை 5.91 ரூபாயும் குறைக்கப்படுகிறது’ என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் டெல்லியில் இன்று முதல் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 494.99 ரூபாயாகவும், மானியமல்லாத சிலிண்டரின் விலை 689 ரூபாயாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. மானியமல்லாத சிலிண்டருக்கு வாடிக்கையாளர்கள் நேற்றுவரை 809.5 ரூபாய் செலுத்திவந்தனர். ஜூன் மாதத்திலிருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து ஆறு மாதங்களாகக் கூடிவந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டிசம்பர் 1ஆம் தேதி மானிய சமையல் சிலிண்டருக்கான விலை 6.52 ரூபாய் குறைக்கப்பட்டிருந்தது.

செவ்வாய், 1 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon