மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சூர்யா: டைட்டில் முடிவானது!

சூர்யா: டைட்டில் முடிவானது!

இயக்குநர் கே.வி.ஆனந்தைப் பொறுத்தவரை விறுவிறுப்பான திரைக்கதை, கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியமைப்பு, ஆட்டம் போடவைக்கும் பாடல்கள் ஆகியவை அவரது அனைத்துப் படங்களிலும் கட்டாயம் இடம்பெறும் அம்சங்கள். இவற்றில் முக்கியமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அருமையான தமிழ் பெயர் ஒன்றைப் படத்துக்கு டைட்டிலாக வைப்பதையும்தான். கோ, அயன், மாற்றான் என்பன சில உதாரணங்கள்.

சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணி ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி எனப் பெயர் எடுத்துவிட்டதால் மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது.

சமீபத்தில் படக்குழுவினர் ‘மீட்பான், காப்பான், உயிர்கா’ ஆகிய மூன்று டைட்டில்களைக் கொடுத்து, அவற்றிலிருந்து ஒன்றைப் பார்வையாளர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்லி கேட்டிருந்தார்கள். அதன்பின் அதிகம் பேர் வாக்களித்த டைட்டிலை புத்தாண்டு அன்று அறிவிப்பதாகக் கூறியிருந்தனர். அதன்படி ‘காப்பான்’ என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சாயிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், உத்தரப் பிரதேசம், குலு மணாலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, இந்தி நடிகர் போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

புதன், 2 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon