மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

3D-யில் ஒரு அடல்ட் படம்!

3D-யில் ஒரு அடல்ட் படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் இயக்குநர் விநாயக் சிவா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் மூலமும், பிக் பாஸ் மூலமும் புகழ்பெற்றதால் மட்டும் யாஷிகாவை இந்தத் திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் அதன் இயக்குநர் விநாயக் சிவா.

யோகி பாபு - யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்கும் இந்தத் திரைப்படம், அடல்ட் சங்கதிகளைப் பேசப்போவது உறுதிதான். ஆனால், யார் மனதையும் புண்படுத்தும் வகையிலான அருவருப்பான காட்சி மற்றும் வசனங்கள் இருக்காது என உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

மோசமான வசனங்கள் மற்றும் கவர்ச்சியான காட்சிகளுக்குப் பதிலாக, ரசிகர்களைக் கவர்வதற்கு டெக்னிக்கல் யுக்திகளைக் கையாள முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D தொழில்நுட்பம் மூலமாக இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

திங்கள், 31 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon