மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 டிச 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 16 பேர் மயக்கம்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 16 பேர் மயக்கம்!

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 16 பேர் மயக்கமடைந்தனர்.

தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. அதாவது 2009 ஆண்டுக்கு முன் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைவிட அதன்பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசியர்களுக்கு 3,000 ரூபாய் அடிப்படை ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து திட்டமிட்டபடி நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ௫௦௦ ஆசிரியைகள் உட்பட 1,400 பேரை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தனர். எனினும் அங்கிருந்தபடியே ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 16 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , இன்று மீண்டும் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

புதன் 26 டிச 2018