மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

பாபர் மசூதி வழக்கு: ஜனவரியில் விசாரணை!

பாபர் மசூதி வழக்கு: ஜனவரியில் விசாரணை!

நீண்ட காலமாகத் தீர்வுக்கு வராமல் இருக்கும் ராமர் கோயில் - பாபர் மசூதி சர்ச்சைக்குரிய வழக்கை 2019ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளது. ராமர் கோயில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய 2.2 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அக்காரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு சரிபாதியாகப் பிரித்தளிக்க வேண்டும் என 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து விரைவான தீர்ப்பை அளிக்க வேண்டும் என பாஜக கருதுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (டிசம்பர் 24) தெரிவித்திருந்தார். 2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள சூழலில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றுமாறு போராட்டங்கள், பேரணிகள் வாயிலாக மத்திய அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. சட்டம் கொண்டுவருவதில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை அக்கட்சி தலைமை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

திங்கள், 24 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon