மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 8 டிச 2019

குளிர்காலச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

குளிர்காலச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

குளிர்கால சீசனில் இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்குள்ளும் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பயண சேவை நிறுவனமான மேக் மை டிரிப் குழுமத்தின் மூத்த நிர்வாக இயக்குநரான சவுஜன்யா ஸ்ரீவஸ்தவா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. இக்காலத்தில் வழக்கத்தைவிட 25 சதவிகிதம் கூடுதலான இந்தியர்கள் தங்களது பயணங்களுக்காக முன்பதிவு செய்துள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்க நகரங்களிலிருந்து சர்வதேச நாடுகளுக்கு அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் கடற்கரை சார்ந்த சுற்றுலாத் தலங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். உள்நாட்டுச் சுற்றுலாவில் கடற்கரை மற்றும் பாலைவனம் ஆகிய இரண்டிலும் அதிக ஆர்வமுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகளை அதிகப் பயணிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். கோவா, உதய்பூர், ஜெய்சல்மார், மணாலி உள்ளிட்ட இடங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான விரும்பத்தக்க சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. மகாராஷ்டிராவின் கொங்கன், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரை சுற்றுலாவுக்கு உகந்த இடங்களாகச் சுற்றுலாப் பயணிகளால் தேர்வு செய்யப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 23 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon