மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

சர்ச்சை நில பத்திரப் பதிவு: தடை நீக்கம்!

சர்ச்சை நில பத்திரப் பதிவு: தடை நீக்கம்!

சென்னையில் சர்ச்சைக்குள்ளான 20 ஏக்கர் நிலத்தை 1,350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கும் வகையில் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில் சட்ட விரோதமாக 1,350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதாகக் கூறி, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளைச் செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சதுப்பு நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப் பதிவு செய்யவும், தனியார் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விடவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அடமானம் வைக்கப்பட உள்ள இந்த நிலம் சதுப்பு நிலம் அல்ல எனத் தமிழக வனத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், சைதாப்பேட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்த இந்த நிலத்தின் பத்திரம் எப்படி மனுதாரருக்குக் கிடைத்தது எனச் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 20) மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 21 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon