மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

மருத்துவக் கல்வி: வஞ்சிக்கப்படும் தமிழக மாணவர்கள்!

மருத்துவக் கல்வி: வஞ்சிக்கப்படும் தமிழக மாணவர்கள்!

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், நீட் தேர்வு வாயிலாக தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவப் படிப்பு வாய்ப்புகளைத் தட்டிச் செல்வது தெரியவந்துள்ளது.

நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்த நான்கு மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனர். அதே நேரத்தில், மாநில ஒதுக்கீட்டின் கீழ் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 191 மாணவர்கள் தமிழக அரசுக்குச் சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனர். இந்த விவரம், மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்ட தகவல்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 422 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்ததால் இப்பிரச்சினை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

வருவாய்த் துறையிடமிருந்து போலிச் சான்றிதழ்களைப் பெற்று, இங்குள்ள கல்வி வாய்ப்புகளை மற்ற மாநிலத்தவர் தட்டிச் செல்வது தெரிய வந்தது. இதைக் கட்டுப்படுத்த மாணவர்களின் பெற்றோர் தமிழகத்தில் படித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடமளிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விதிமுறைகளை வகுத்தது. மற்ற மாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ இடங்களைப் பிடிப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon