மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!

அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!

இந்தியாவில் சைபர் தாக்குதலால் செலவுகள் 10.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட், ஃப்ரோஸ்ட், சுலீவன் ஆகிய நிறுவனங்களால் ஆசிய பசிபிக் பகுதியில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையைக் கண்டறிவது: டிஜிட்டல் உலகின் நவீன நிறுவனங்களைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ‘சைபர் தாக்குதல்களால் இந்திய நிறுவனங்களுக்கு 10.4 மில்லியன் டாலர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதில் நேரடி இழப்பு வெறும் 0.9 மில்லியன் டாலர் மட்டுமே. வேலையிழப்பு போன்ற மறைமுக இழப்பால் 3.1 மில்லியன் டாலரும், வாடிக்கையாளர் குறைவு, நிறுவனங்களின் செலவினம் போன்ற மேக்ரோ பொருளாதாரப் பாதிப்பால் 6.3 மில்லியன் டாலரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டும் 11,000 டாலர் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

துறை வாரியாகக் கணக்கிட்டால் உற்பத்தித் துறையில் 18 விழுக்காடும், நிதித் துறையில் 12 விழுக்காடும், அரசுத் துறைகளில் 11 விழுக்காடும் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த ஆய்வில் பங்கெடுத்த 68 விழுக்காடு இந்திய நிறுவனங்கள் சைபர் தாக்குதல் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளன. ஆனால், அதில் 38 விழுக்காடு இந்திய நிறுவனங்கள் மட்டுமே தரவு மீறல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வானது 13 ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள 1,300 நடுத்தர மற்றும் பெரிய, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை வகுப்பாளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 20 விழுக்காடு நிறுவனங்கள் திட்டத்தின் தொடக்கத்திலும், 40 விழுக்காடு நிறுவனங்கள் திட்டத்தின் இறுதியிலும் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon