மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சேலம் ரயில்வே: ரூ.1 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே: ரூ.1 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் நவம்பர் மாதத்தில் ரூ.1.18 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தது, முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது, முன்பதிவு செய்யாமல் அளவுக்கு அதிகமான பயண மூட்டைகள் எடுத்துச் செல்லுதல் போன்றவற்றுக்காக, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் மாதத்தில் ரூ.1,18,76,020 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட வணிக மேலாளர் விஜுவின் டி.என்.என். ஊடகத்திடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நவம்பர் மாதத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக 3,532 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.16,54,239 வசூலிக்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது முறையான டிக்கெட் வைத்திருக்காத 29,607 பேரிடமிருந்து 1,23,95,233 ரூபாயும், முன்பதிவு செய்யப்படாத பயண மூட்டைகளை எடுத்து வந்ததற்காக 487 பயணிகளிடம் 2,18,006 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சேலம் ரயில்வே கோட்டத்தைப் பொறுத்தவரையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.7,21,47,834 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக மட்டும் 29,607 பேரிடம் ரூ.1,23,95,233 வசூலிக்கப்பட்டுள்ளது. முறையான டிக்கெட் இல்லாத 1,40,009 பேரிடம் ரூ.5,79,92,244 வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டமானது சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon