மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

‘பிரதமர் 3.0’ யாரு தெரியுமா: அப்டேட் குமாரு

‘பிரதமர் 3.0’ யாரு தெரியுமா: அப்டேட் குமாரு

பகவதிக்கு ஒரு குட்டி பகவதி இருக்குற மாதிரி.. பொன்னாரு நமக்கெல்லாம் ஒரு குட்டி பிரதமரா இருக்காராம். லேட்டஸ்ட் டிரெண்டுல சொன்னோம்னா 'பிரதமர் 3.O'. இதை நான் இல்ல அவரே சொன்னாருங்க. புயல் பாதிச்ச பகுதிகளை பிரதமர் சார்பா அவர் பார்வையிடுறதா சொல்லியிருக்காரு. இந்த ஒரு வார்த்தை போதாதா.. ட்விட்டர் பக்கம் அடை மழையா அடிச்சு தள்ளிட்டாங்க. இது ஒரு பக்கம்னா.. ராஜஸ்தான், தெலங்கானா பக்கம் வாக்கு பதிவு இயந்திரத்துல எப்பவும் போல கோளாறு ஆயிடுச்சாம். நம் சார்பா நம் ஓட்டை வேற யாருக்கோ போட்ருக்கோமோன்னு மக்கள் குழப்பத்துல இருக்காங்களாம். நான் நேர்ல போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்துடலாம்னு தான் பார்த்தேன் மறுபடியும் ஏர்போர்ட் கூறை இடிஞ்சு விழுதாம்.. நமக்கு எதுக்கு வம்பு வழக்கம் போல டீக்கடைக்கே போயிட்டு வாரேன். அப்டேட்டை பாருங்க.

@ItsJokker

"நேரமே இல்ல"ன்னு சொல்றவன்ட்ட இருந்து மொபைல பிடுங்கி வைங்க..

"நேரமே போக மாட்டேங்குது" னு கதறிட்டு வருவாங்க..

@itskutty

யாருக்கும் புரியாத மாதிரி மருந்து சீட்டு எழுதி கொடுக்கிற டாக்டர் மாஸ் என்றால்

அந்த புரியாத கையெழுத்த பார்த்து மருந்து கொடுக்கும் மருந்து கடைக்காரர் பக்கா மாஸ்

டாக்டர் எழுதி கொடுத்த மருந்து தான் கடைக்காரன் எடுத்து கொடுத்தாரா என்று தெரியாமல் சாப்பிடும் நாம் மரண மாஸ்

@Fazil_Amf

என்னை திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் - விஜய் மல்லையா

நியாயத்த கேட்குற எங்களையே சமூக விரோதின்னு சொல்லுறாங்க..!!

@vickytalkz

83-வது முறையாக சென்னை விமான நிலைய கண்ணாடி விழுந்து நொறுங்கியது#

ரொம்ப பெருமையோ இருக்கு சார்

@Kozhiyaar

தன் திருமண வீடியோவை திரும்ப திரும்ப போட்டு பார்த்தா அவன் சராசரி மனிதன்!!

அந்த வீடியோ விற்று பணம் பார்த்தா அவங்க பிரபலம்!!!

@Thaadikkaran

புயல் பாதித்த பகுதிகளில், பிரதமரின் சார்பில் தான் பார்வையிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் # தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி பிரதமர் போல..!

@BalaSankarTwitZ

இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இருக்காது" - தினகரன்

2 வருசமா வெறும் பில்டப் மட்டும் தான் ...செயல்ல ஒன்னுத்தையும் காணோம்

@parveenyunus

வேண்டாம் என்றால் ஆதார் தகவல்களை திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்

அப்படியே அந்த கண்றாவி ஆதார் அட்டை போட்டோவையும் திரும்ப கொடுத்தா நல்லா இருக்கும்.

@parveenyunus

நாடே திரும்பி பார்க்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் -எம்பி.களுக்கு எடப்பாடி அறிவுரை #

நீங்க மட்டும் அண்ணாந்து பாக்கற மாதிரி ஹெலிகாப்டர்ல போவீங்களாக்கும்..?

@muruganv71

செல்லுல சார்ஜர் பின்னை சொருகி சார்ஜ் போடுறது,தாம்புக் கயிற்றை மொளக்குச்சியில கட்டி,ஆட்டையோ மாட்டையோ மேய்ச்சலுக்கு விடுற மாதிரி இருக்கு.

@Giri47436512

"பாலூத்திருவாங்க"னு தெரிஞ்சதாலதான் எந்த

புத்துல இருந்தும் வெளிய வர்றதே இல்ல பாம்பு!!...

@HAJAMYDEENNKS

ஏதாச்சும் ஒரு அசம்பாவிதம் நடந்தால்தான் அரசு அனுமதி பற்றி அரசாங்கத்திற்கே நினைவு வருது !

வெ. பூபதி

எதிர்க்க துணிவில்லேனா பரவால்ல. புலம்பக்கூட துணிவில்லேனா ரொம்ப கொடுமை!

@itz_azha

தமிழ்நாட்டை பாஜக ஆண்டிருந்தால் உலகின் முதல்மாநிலமாக மாறியிருக்கும் - பொன்னார்#

பாஜக ஆட்சி செய்ற மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறந்த மாநிலமா லிஸ்ட்ல வந்துருச்சா??

@Annaiinpillai

புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் சார்பில் தான் பார்வையிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

மாப்பிள்ளை அவரு தான் ஆனா அவர் போட்டுருக்க சட்டை என்னுது மொமென்ட்!

@Fazil_Amf

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார்.

• இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை..!!

@MMM_Musharraf

சலூன்கடைக்காரர் மசாஜ் போடுறப்போ.. முடி கொட்டுறவங்களுக்கு,

"இருக்குற முடியையும் கழட்டி எடுத்துருவாறோன்னு"

ஒரு பயம் மனசுக்குள்ள இருந்துகிட்டு தான் இருக்கும் போல..!

@ItsJokker

காதலி மனைவியான பின் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பு.

"உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லைங்க" என்பதுதான்.

@HAJAMYDEENNKS

இப்பலாம் வடிவேலு காமெடி பார்க்கும்போது அதை வைத்து ஹிட்டடித்த மீம்ஸ்களும் கண் முன்னே வந்து சிரித்துவிட்டு போகிறது !

-லாக் ஆஃப்

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon