மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

எதிர்ப்பு: ரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம்!

எதிர்ப்பு: ரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, அந்நிகழ்வு வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் இரண்டு நாள் தியான நிகழ்ச்சி டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்குத் தடை விதிக்கக் கோரி தஞ்சையில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்திவந்தனர். தனியார் நிகழ்ச்சிகளுக்கு பெரிய கோயிலில் அனுமதியளித்த தொல்லியல் துறையும் விமர்சனத்துக்கு ஆளானது.

இதையடுத்து, இன்று (டிசம்பர் 7) சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2 நாள் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருப்பதையும், பந்தல்களும் இருக்கைகளும் அகற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து தியான நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி தியான நிகழ்ச்சி வேறு இடத்தில் நடைபெறும் எனவும், அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon