மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

வேளாண் ஏற்றுமதி கொள்கை தயார்!

வேளாண் ஏற்றுமதி கொள்கை தயார்!

2022ஆம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதி மதிப்பை 60 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கத்தில், உருவாக்கப்பட்டுள்ள புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய வேளாண் கொள்கை - 2018க்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. வேளாண் துறையில் உலகளவில் மிகப் பெரிய நாடாக இந்தியாவை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, கொள்கைத் திட்டங்கள் மூலமான இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவது போன்றவை இக்கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்துவது, அழுகும் தன்மையில் உள்ள வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டி இந்தியாவின் ஏற்றுமதி நிலையை மாற்றியமைப்பது, தூய்மைப் பிரச்சினை மற்றும் பிற தடைகளை அகற்றி எளிதாகச் சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கு நிறுவன முறையை உருவாக்குவது, விரைவில் சர்வதேச மதிப்புச் சங்கிலியுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை இரண்டு மடங்காக உயர்த்துவது போன்றவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon