மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

கேமராவைக் குறிவைக்கும் சியோமி!

கேமராவைக் குறிவைக்கும் சியோமி!

சியோமி நிறுவனம் அதன் அடுத்த வெளியீட்டில் 48 மெகா பிக்ஸல் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற Qualcomm 4G/5G கூட்டத்தில் சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவரான மனு ஜெயின், அடுத்த ஆண்டில் 675 ப்ராஸஸர் கொண்ட ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்திய தகவல் ஒன்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்ஸல் கொண்ட சென்சார்களும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைவர் லின் பின், சீனாவைச் சேர்ந்த மைக்ரோ ப்ளாகிங் இணையதளமான வெய்போவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

லின் பின், பதிவுடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனின் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்ஸல் வசதி இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த போனானது, ஜனவரி மாத வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் லின் பின் கூறியிருக்கிறார்.

முன்னதாக ஜூலை மாதம் சோனி நிறுவனம் Sony IMX586 என்ற ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்ஸல் சென்சாரைப் புகுத்தியிருந்தது. தற்போது சியோமியும் இதே தொழில்நுட்பத்தைத்தான் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon