மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ தடைக்கு மறுப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு தொடுக்கப்பட்ட வழக்கில் மறுப்பு தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.

கடந்த மே 22ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. கடந்த அக்டோபர் 8ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் புதிதாக 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமையன்று (அக்டோபர் 8) வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜுனன் அளித்த புகாரின் பெயரில் அடையாளம் தெரியாத காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.

இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை இன்று (டிசம்பர் 7) விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் வழங்கினர்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon