மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சிபிஐ நீதிமன்றத்தில் அமைச்சர் பிஏ!

சிபிஐ நீதிமன்றத்தில் அமைச்சர் பிஏ!

குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் இன்று (டிசம்பர் 7) நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2016 ஆம் ஆண்டு மாதவரத்தில் உள்ள குட்கா குடோனில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையை அடுத்து, இவ்விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இவ்வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் முதல் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன.

இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது. அதில் இன்று காலை 10 மணிக்குச் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதுபோன்று, விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனும் ஆஜராக வேண்டும் என்று மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பியும், சரவணன் நேரில் ஆஜராகவில்லை என்று சிபிஐ கூறியிருந்த நிலையில், இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon