மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ஊடக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு!

ஊடக ஏற்றுமதியை உயர்த்த இலக்கு!

அடுத்த 5 ஆண்டுகளில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஏற்றுமதியை 10 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

7ஆவது பிக் பிக்சர் மாநாடு டெல்லியில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில் துறை கூடுதல் செயலாளர் சுதன்ஷு பாண்டே கலந்துகொண்டு பேசுகையில், “தற்போது இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஏற்றுமதி 1 பில்லியன் டாலராக உள்ளது. இதை 10 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போதுள்ள 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடியோ மற்றும் விஸுவல் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 10 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள் ஏற்றுமதி தற்போது 6 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38 விழுக்காடாகும். இதுபோல நாமும் நம்முடைய ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்” என்றார். தற்போது உலக அளவில் ஆடியோ மற்றும் விஸுவல் ஏற்றுமதியில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon