மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சின் முத்திரை விளங்கிடுமே...

 சின் முத்திரை விளங்கிடுமே...

விளம்பரம்

காலை எழுந்ததுமே ஃபேஸ்புக் சாய்பாபா குழுவில் ஓர் பாடலை பறக்க விட்டிருந்தார்கள். சாய்பாபாவை நினைத்துக் கொண்டே அந்தப் பாடலில் சஞ்சாரம் செய்யும்போது, மனம் மிதக்கிறது அருள் வெளியில்.

அந்தப் பாடலை முதலில் பார்ப்போம்.

அளவில் அளவ நிதிகள் விரைந்தோடி வருமே

சாய் பார்க்க சாய் பார்க்க கோடி நன்மையே

சீரடி சாய்பகவான்

பதம் போற்றினால். மகிழ்ந்து

பலன் தருவார் தவக்கோலத்திலே

குறையேதும் இல்லையே

மனதில் பூக்கும் முல்லையே

நெஞ்சோடு குடியேறும் நிம்மதி

சாய்நாமமே துணையாகுமே

சாய் நாமமே துணையாகுமே

ஞானம் ஒளி வீசும்

தடையாவும் விலகும்

நலமோடு

வளம் கோடி வந்து சேர்ந்திடும்

சாயீ என்று சரணடைந்தால் எடுத்தது ஜெயம் தருமே

சிந்தையில் அமைதியை வழங்கிடும் வகையிலே

சின்முத்திரை விளங்கிடுமே சின்முத்திரை விளங்கிடுமே”

-பாடல் முடிந்ததும் சின் முத்திரை விளங்கிடுமே சின் முத்திரை விளங்கிடுமே என்ற வரிகள் எனக்குள் ஒரு தேடலை ஏற்படுத்தின.

அது என்ன சின் முத்திரை, சின் முத்திரைக்கும் சாய்பாபாவுக்கும் என்ன சம்பந்தம் என்று இணையத்தில் தேடத் தொடங்கினேன்.சில தகவல்கள் கிடைத்தன..

“பெருவிரலால் ஆள்காட்டி விரலின் நுனியை தொடுவது பரத நாட்டிய முத்திரை. சின்முத்திரை அல்ல அது. சின்முத்திரை என்பது ஆள்காட்டி விரலால் பெருவிரலின் மத்திய கோடினை தொடுவது. இது தான் உண்மையான சின் முத்திரை.

சின்முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் இந்த சின் முத்திரையை கையில் பிடித்து கண்ணை மூடி கொண்டு தவம் செய்வர். அப்படி இருந்தால் ஒரு பயனும் இல்லை. அப்படியென்றால் சின் முத்திரை என்பதன் பொருள் என்ன?

“பரசிவம் சின்மயம் பூரணம் ” என்று வள்ளலார் பெருமான் பாடியிருக்கிறார். இறைவன் சின்மயமாக இருக்கிறார். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்பதே. நமது கண்ணின் அளவு பெருவிரலின் நுனியில் இருந்து நடு கொடு வரை. இவ்வாறு சின்முத்திரையை பிடித்து கொண்டு நம் கைகளை பார்த்தால் அது கண் போல் இருக்கும். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்று அர்த்தம். சொல்லாமல் சொன்னவரை – தட்சிணாமூர்த்தி சொல்லவில்லை. உணர்த்தி காட்டி இருக்கிறார். புரிந்து கொள் என்று சொல்லி இருக்கிறார்” என்கிறது அந்த வலைப் பக்கம்.

சின்முத்திரைக்கும் அக்கரைப்பட்டி சாய்பாபாவுக்கும் என்ன சம்பந்தம்?

பார்ப்போம். காத்திருங்கள்

பாபா பரவசம் தொடரும்

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com

விளம்பர பகுதி

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon