மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஈரோடு: ரூ.1 கோடியில் நீர்த்தேக்கத் திட்டம்!

ஈரோடு: ரூ.1 கோடியில் நீர்த்தேக்கத் திட்டம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1,800 ஹெக்டேர் பரப்பளவிலான பாசனப் பரப்பை மேம்படுத்த ரூ.1 கோடியில் நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள 1,800 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் நிலங்களை மேம்படுத்த வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான கிராமப்புற வங்கி (நபார்டு) நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்தப்படுகிறது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்படும் இந்த நீர்த்தேக்கத் திட்டத்துக்கான செலவில் 50 விழுக்காடு அளவுக்கு பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம் பங்களிக்கிறது.

நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் நீர்த்தேக்க நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதே முறையைப் பின்பற்றி தற்போது ஈரோட்டிலும் அமைக்கப்படவுள்ளது. இந்திய-ஜெர்மனி நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் நீர்த்தேக்க மேம்பாட்டுப் பணிகளை நபார்டு வங்கி 1990ஆம் ஆண்டுமுதல் மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்தத் திட்டத்தின்படி சத்தியமங்கலத்தின் கொண்டப்பநாயக்கன் பாளையத்தை சுற்றியுள்ள 1,800 ஹெக்டேர் அளவிலான வேளாண் நிலப்பரப்புகளில் 3 ஆண்டுக்கால இடைவெளியில் மண் வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் பணிகளுடன் வேளாண் மற்றும் தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் ஒருங்கே மேற்கொள்ளப்படவுள்ளன.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon