மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 டிச 2018

ஸ்ரீவைகுண்டம் அணை நீர்: நீதிமன்றம் கேள்வி!

ஸ்ரீவைகுண்டம் அணை நீர்: நீதிமன்றம் கேள்வி!

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து சட்டவிரோதமாகத் தண்ணீர் வழங்கப்படுவதால் பலனடையும் நிறுவனங்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று(டிச-6) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் சப்ளை செய்ததால் அரசுக்கு 4566 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாகச் சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில்,மக்களுக்குத் தேவையான தண்ணீரை ஆயிரம் லிட்டர் 170 ரூபாய்க்கும் தொழிற்சாலைகளுக்கு 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது, இதனால் 4,556 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி தண்ணீர் எடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும், தண்ணீர் கிடைக்காததால் பாதிப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மனுதாரர் ஜோயல் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், ”பசுமை தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்றவில்லை என அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல், வேறு கோரிக்கையுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் தண்ணீர் பெற்றுப் பலனடையும் நிறுவனங்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரர் ஜோயலுக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon