மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

கரியமில வாயு வெளியேற்றம்: இந்தியா 3வது இடம்!

கரியமில  வாயு வெளியேற்றம்: இந்தியா 3வது இடம்!

கால நிலைமாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றுவதில் உலகிலேயே இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக கிழக்கு ஆங்கிலியா என்ற பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

உலக காலநிலை மாற்ற மாநாடு போலந்திலுள்ள காட்டோவைசில் கடந்த 3 ஆம்தேதியிலிருந்து நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலகிலுள்ள 190 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். .இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டிற்காக கால நிலை மாற்றம் குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாநாட்டில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

அந்த ஆய்வில் கரியமிலவாயுவை வெளியேற்றுவதில் இந்தியாதான் உலகில் 3 வது இடத்தில் உள்ளது. 2017லிருந்து இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு 6.3 விழுக்காடாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகளவில்,2018இல் 37.1 பில்லியன் டன்கள் அளவில் கரியமில வாயு வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் இவ்வாயுவை வெளியேற்றும் நாடுகளில் 10 நாடுகள் முதன்மையாக உள்ளன. சீனா,அமெரிக்கா,இந்தியா,ரஷ்யா,ஜப்பான்,ஜெர்மனி, ஈரான்,சவுதி அரேபியா,தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளே அதிகமான அளவில் வெளியிடுகின்றன.

உலகளவில் 2017இல் சீனா 27 விழுக்காடு கரியமில வாயுவை வெளியிட்டது. 2018இல் அந்நாட்டின் வாயு வெளியேற்றம் 4.18 ஆக உயர்ந்துள்ளது. இது மிக அதிகமான அளவாகும்.

பாரிசில் நடந்த உலக கால நிலைமாற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி வரும் 2030ற்குள் தற்போது வெளியிடப்படும் கரியமில வாயுவில் 50 விழுக்காடு குறைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon