மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

யோகா தந்தவங்களுக்கு ஸ்வாஹா: அப்டேட் குமாரு

யோகா தந்தவங்களுக்கு ஸ்வாஹா: அப்டேட் குமாரு

குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்குதுன்னு சொன்னா கம்பளிப் போர்வை வாங்கி கொடுத்து அனுப்புங்க குளிருக்கு இதமா இருக்கும்னு பேசிகிட்டு இருக்காங்க சார். நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படுங்கள்ன்னு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்காராம். ஏற்கெனவே அதிமுகவோட விஞ்ஞானிகள் அணி சர்வதேச அளவுல டிரெண்ட் ஆகிட்டு இருக்குற தகவல் இன்னும் அவருக்கு சொல்லப்படலையோ என்னவோ.. சரி சரி என்னப்பா நம்ம பக்கம் ரொம்ப நாள் வைகோவை காணோமேன்னு நேத்து தான் நினைச்சேன். இன்னைக்கு அவரே வண்டியில வந்து ஏறிகிட்டாரு. இனி தேர்தல் ஆரம்பிக்குற வரைக்கும் நமக்கு மீம்ஸுக்கு பஞ்சம் இருக்காது. அப்டேட்டை பாருங்க

@Kozhiyaar

'சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!?' எனும் பொழுதே சோதனை எலி ஆவதற்கு மனதளவில் தயாராக வேண்டியதுதான்!!!

@silambuselvanm

இப்ப மட்டும் எங்க அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால்...

//ஊதுபத்தி விற்பனை கார்ப்பரேட் லெவலுக்கு போயிருக்கும்...

@mohanramko

ஆராய்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் புரியுது, நாம தேடுவதை தவிர மற்ற எல்லாமே அந்தந்த இடத்தில் இருக்கு...

@kathir_twits

ஒருவரிடம் பேசிகொண்டு இருக்கும் போது, திடீரென அவருக்கு வரும் தொலைபேசி அழைப்பில் அவர் பேசும் நேரஅளவே நமக்கான முக்கியத்துத்தை தீர்மானிக்கிறது !!

@Aruns212

போர்,சிக்ஸ் என்று போனால் 'கொஞ்சம் சவுண்டு வையி' என்பதும்,விக்கெட்டுகளாகப் போனால் 'அந்த கெரகத்த ஆஃப் பண்ணு' என்பதும் கிரிக்கெட் பார்க்கும் அப்பாவின் விளையாட்டுகள்.

@Thaadikkaran

மனைவி கணவனிடம் 'என்னை எவ்வளவு பிடிக்கும்' என்ற கேள்விக்கு சரியாய் பதில் சொல்ல தெரிந்தவன் பிழைத்து கொள்வான்

@Annaiinpillai

பாத்ரூம் வரை பயணிக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற போதை வஸ்து செல்போன்!

@Thaadikkaran

பஸ்ல என்ன பாட்டுன்னே தெரியாத பாட்டு எல்லாம் முழுசா பாடும். நமக்கு பிடிச்ச பாட்டு வரும்போது மட்டும் டிரைவர் பாட்டு மாத்துறது எல்லாம் டிசைன்ல இருக்கு..!

@Kozhiyaar

இளமையில் தூக்கம் வராததற்கு வாழ்க்கையின் ஆயிரம் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம்!!

முதுமையில் தூக்கம் வராதது மட்டுமே வாழ்க்கை பிரச்சனையாக இருக்கும்!!

@TalksssTweet

மனைவி; ஏங்க டீவிய கொஞ்ச நேரம் ஆப் பண்றீங்களா.....

கணவன்: ஏன் பொண்ணு படிக்கிறாளா???

மனைவி: இல்லங்க பக்கத்து வீட்ல ஒரே சண்டை ஒன்னுமே கேட்க மாட்டேங்குது அதான்

@udaya_Jisnu

கல்யாண பத்திரிக்கைய முதல்ல குலதெய்வத்துக்கு படைக்கிற மாதிரி,

புது பாட்டு எது வந்தாலும் முதல்ல வடிவேலுக்குதான் "படைக்கிறாங்க" மீம் கி்ரியேட்டர்ஸ்...

@Annaiinpillai

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது - செய்தி #

// எல்லாருக்கும் கம்பளியும், குல்லாவும் கொடுங்க போத்திகிட்டு தூங்குரதுக்கு!

@Annaiinpillai

`நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படுங்கள்!’ - எம்.பி-க்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி#

ஹெலிகாப்டர்ல போனதுல உலகமே உங்கள தான் பாத்துச்சு சேகு!

@mohanramko

மேட்சிங் பிளவுஸ் எடுக்க போன மனைவி ரெண்டு மணி நேரமாகியும் வரவில்லையேனு கடைக்குள் போனேன். அந்த சேல்ஸ்மேன் பாவமாய் என்னை பார்த்தார்..... அது ஆயிரம் அர்த்தம் பொதிந்த பார்வை.....

@Anandh_Offl

எந்த ஆடைய உடுத்தினாலும் "டைட்டா" இருக்குனா அவங்களுக்கு தேவை "டயட்டா" தான் இருக்கும்

@ameerfaj

உலகத்திற்கு இந்தியா தந்த பரிசு 'யோஹா'! -மோடி.

இந்திய மக்களுக்கு நீங்கள் தந்த பரிசு 'சுவாஹா'!!

@ShahulH14423965

நான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - வைகோ..

மத்தவங்களுக்கு புரியுமோ புரியாதோ, கேப்டன் விஜயகாந்துக்கு புரிஞ்சிருக்கும் குருநாதா!!!

@nandhu_twitts

தலையெழுத்தை எல்லாம், பேன்களின் கால்தடங்கள் அழித்திருக்க கூடும்..!!

@ajmalnks

நாடே திரும்பி பார்க்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் -எடப்பாடி

தம்பி பின்னாடி தொங்குற உலகமேப்பை தூக்கி என்னைப் பார்க்கிறமாதிரி முன்னாடி மாட்டுப்பா-செல்லூர்

@ArunkumarTNR

நாடே திரும்பி பார்க்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் - முதல் அமைச்சர் பழனிசாமி

ஏன் இன்னொரு முறை ஏதாவது துப்பாக்கி சூடு நடத்த போறீங்களா முதல்வரே!!

@motheen_farook

சிம்பு : வந்தா ராஜாவா தான் வருவேன் ...

மோடி : வந்தா ஓட்டு கேட்க மட்டும் தான் தமிழகம் வருவேன் ...

-லாக் ஆஃப்

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon