மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஆதார் வேண்டாமென்றால் விலகிக்கொள்ளலாம்!

ஆதார் வேண்டாமென்றால் விலகிக்கொள்ளலாம்!

ஆதார் எண்ணிலிருந்து வேண்டாமென்றால் விலகிக்கொள்ளும்படி ஆதார் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஆதார் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது என 'தி இந்து நாளிதழ்' இன்று (டிச.6) செய்தி வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக 'தி இந்து நாளிதழ்' வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

கடந்த செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமர்வு ஆதார் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஆதார் சட்டத்தின் பிரிவு 58ன் படி, தனியார் சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது. ஆகவே, அந்த தீர்ப்பிலிருந்து அந்த சட்ட பிரிவை நீக்கி விட்டது.

தற்போது ஆதார் சட்டம் திருத்தப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, ஒரு குழந்தை 18 வயதை அடைந்து விட்டால் ஆதாரில் இருப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவருக்கு 6 மாதம் காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

இந்த சட்டத் திருத்த முன்வரைவு, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரும்பினால் ஆதாரிலிருந்து வெளியேறிக் கொள்ளலாம் என்ற வசதியானது குறிப்பிட்ட சமுதாயத்தின் பிரிவினர் என்றில்லாமல், அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த முன்வரைவு இதுவரை பான் கார்டு இல்லாதவர்களுக்கும் அல்லது அது தேவைப்படாதவர்களுக்கும் பயனளிக்கும்.

2018 மார்ச் 12 ஆம் தேதி வரை 37.50 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில்,16.84 கோடி பான் கார்டுகள்தான் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆதாரிலுள்ள விபரங்களை வெளிப்படுத்தலாமா என்பதை அதற்காக நியமிக்கப்படும் ஒரு நீதித்துறை அதிகாரிதான் தீர்மானிப்பார் என்’று சட்டத்திருத்தம் கூறுகிறது. ஆதார் சட்டத்தில் பிரிவு33(2)ன்படி தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக துணை செயலர் மட்டத்திலுள்ள அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆதார் விபரங்களை வெளிப்படுத்தலாம் என்றிருந்தது. இந்த பிரிவு நீக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon