மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 15 செப் 2019

பசுவின் பெயரால் வன்முறை: உ.பி. முதலிடம்!

பசுவின் பெயரால் வன்முறை: உ.பி. முதலிடம்!

பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள் நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நாடு முழுவதிலும் பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் வைத்து இந்தியாஸ்பெண்ட் செய்தி நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. இதன்படி, இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் பசு பாதுகாப்பு வன்முறை உச்சத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பசு பாதுகாப்பு கும்பல்கள் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரைக் கல்லால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தது நாடு முழுவதிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், பசு பாதுகாப்பு வன்முறையில் போலீசார் தாக்கப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பு ஏழு சம்பவங்களில் போலீசாரை பசு பாதுகாவலர்கள் குறிவைத்துள்ளனர்.

வடஇந்தியா மாநிலங்களில்தான் பசு பாதுகாப்பு வன்முறை மிகுதியாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது அதிலும், சம்பவங்களின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் உத்தரப் பிரதேசம் உச்சம் வகிக்கிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் அதிகபட்சமான பசு பாதுகாப்பு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே தாக்குதலுக்கு ஆளாவதாகவும், பத்தில் ஒரு நபர் தலித்தாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon