மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ராஷி கண்ணாவின் ஒரிஜினல் என்ட்ரி!

ராஷி கண்ணாவின் ஒரிஜினல் என்ட்ரி!

ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அடங்க மறு திரைப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இப்படம் காவல் துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ள நிலையில் இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் நல்ல கவனம் பெற்றாலும் அது நயன்தாராவின் படமாகவே பார்க்கப்பட்டது. படத்தின் வெளியீட்டிற்குப் பின்னர் காட்சிகள் நீளமாக இருப்பதாகக் கருதிய படக்குழு ராஷி கண்ணா நடித்த சில காட்சிகளை நீக்கியது. இதனால் அடங்க மறு திரைப்படமே அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து ஜெயம் ரவியும், ராஷி கண்ணாவும் பேசிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தை நவம்பரில் வெளியிட முதலில் திட்டமிட்ட படக்குழு தற்போது டிசம்பர் 21ஆம் தேதி ரிலீஸை உறுதிசெய்துள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் செய்ய சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக லால்குடி இளையராஜா பணியாற்றியுள்ளார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon