மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஆந்திராவில் செம்மரக் கடத்தல்: 13 பேர் கைது!

ஆந்திராவில்  செம்மரக் கடத்தல்: 13 பேர் கைது!

ஆந்திராவில் செம்மரம் கடத்துவதற்கு சென்றதாக இன்று (டிச. 6) தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே செம்மரம் வெட்டிக் கடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பதி அருகே உள்ள ஐத்தேபள்ளி வனப்பகுதியில், செம்மரங்களை ஏற்ற வாகனத்துடன் வந்த 13 பேரை ஆந்திர வனத்துறையினர் இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இன்று திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

கடந்த மாதம் 26ஆம் தேதி, செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 20 தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கானது நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்கள் ஆந்திர போலீசாரால் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon