மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 டிச 2018

துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் மறுப்பு: உத்தரவு ரத்து!

துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் மறுப்பு: உத்தரவு ரத்து!

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் 2023ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். பாஸ்போர்ட் புத்தக பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்கக் கோரி துரைமுருகன் விண்ணப்பித்திருந்தார். வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்து, விண்ணப்பத்தைத் திருப்பி அளித்துவிட்டது.

இதை எதிர்த்து துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் 2017 பிப்ரவரியில் விடுவித்து விட்டதாகவும், சீராய்வு மனு மட்டும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் துரைமுருகன் தரப்பில் வாதிடப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இல்லாததால் பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவு தவறு எனவும், துரைமுருகன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை இன்று (டிச. 6) விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தைத் திருப்பி அளித்துப் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் விண்ணப்பித்தால் நான்கு வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon