மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஏசி ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு!

ஏசி ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு!

ராஜ்தானி, துரொந்தோ உள்ளிட்ட முழுமையாக ஏசி வசதியுள்ள ரயில்களில் பெண்களுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண் பயணிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகளில் நான்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது கூடுதலாக பெண்களுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு மெயில்/விரைவு ரயிலிலும் பெண் பயணிகளுக்கு (எந்தவித வயது வரம்புமின்றி) ஸ்லீப்பர் வகுப்புகளில் ஆறு படுக்கைகள் ஒதுக்கப்படுகிறது. இப்போது கூடுதலாக ஏசி பெட்டிகளில் ஆறு படுக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து ராஜ்தானி /துரொந்தோ / முழு ஏசி ரயில்களிலும் 3 ஏசி வகுப்பில் பெண் பயணிகளுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. தனியாகவும், குழுவாகவும் பயணிக்கும் பெண்களுக்கு இது பொருந்தும். இந்தப் படுக்கை ஒதுக்கீட்டைப் பயன்படுத்த வயது வரம்பு ஏதுமில்லை.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon