மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வேகமான வளர்ச்சியில் சேவைகள் துறை!

வேகமான வளர்ச்சியில் சேவைகள் துறை!

நவம்பர் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை முந்தைய ஐந்து மாதங்களில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, விருந்தோம்பல், மாஸ் மீடியா, தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள் உள்ளிட்ட பிரிவுகளை அடக்கிய இந்தியாவின் சேவைகள் துறையானது சென்ற நவம்பர் மாதத்தில் சிறப்பான தொழில் நடவடிக்கையைக் கொண்டிருந்ததாக நிக்கி இந்தியா சர்வைசஸ் நிறுவனம் தனது ஆய்வில் கூறியுள்ளது. நிக்கி சேவைகள் தொழில் குறியீடு நவம்பர் மாதத்தில் 53.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் அது 52.2 புள்ளிகளாக மட்டுமே இருந்தது. சந்தை நிலவரங்கள் சிறப்பாக இருந்ததாலும், விற்பனை வளர்ச்சி காரணமாகவுமே இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக நிக்கி சர்வைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் கூட்டு வளர்ச்சியைப் பார்த்தோமேயானால், அக்டோபர் மாதத்தில் 53 புள்ளிகளிலிருந்து நவம்பர் மாதத்தில் 54.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இத்துறைகளின் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு உருவாக்கமும் சிறப்பாக இருந்ததாக நிக்கி மார்கிட் நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநரான பாலியனா டீ லிமா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சேவைகளுக்கான கட்டணங்கள் அல்லது விலையைப் பொறுத்தவரையில், நவம்பர் மாதத்தில் சேவைகளுக்கான விற்பனை விலை மிக அதிகமாகவே இருந்ததாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon