மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சிறு நிறுவனக் கடன்கள் உயர்வு!

சிறு நிறுவனக் கடன்கள் உயர்வு!

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடன்கள் ஐந்து மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வு கூறுகிறது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கில் சென்ற ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தொழில் நெருக்கடி ஏற்பட்டதாகவும் புகார்கள் வந்தன. இந்த நிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகிலிருந்து அத்துறையினருக்கான கடனுதவிகள் அதிகரித்து வருவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு மொத்தம் ரூ.1.23 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, ஜூலை 1 முதல் 15 மாதங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு மொத்தம் ரூ.25,700 கோடி மட்டுமே கடனாக வழங்கப்பட்டிருந்தது. அதாவது ஜிஎஸ்டி வந்த பிறகு ஐந்து மடங்கு கூடுதலாக இத்துறையினருக்குக் கடனுதவி கிடைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு மற்றும் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால்தான் அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினருக்கான கடன்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று எஸ்பிஐ ரிசர்ச் ஆய்வு கூறுகிறது.

சர்வதேச நிதி கார்ப்பரேஷன் அமைப்பின் ஆய்வுப்படி, தற்போது 139 பில்லியன் டாலராக உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான உண்மையான கடன் தேவை 370 பில்லியன் டாலராகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon