மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பது பொய்!

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பது பொய்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை வளர்ந்துள்ளதாகக் கூறுவது போலியானது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (டிசம்பர் 2) அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை வளர்ந்துள்ளதாகக் கூறுவது போலியானது. 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வாகன விற்பனை அதிகரித்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஊழியர் சேமலாப நிதியத் திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் சுய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைத்தான் காட்டுகின்றன. பொருளாதார எதார்த்தத்தை மறைத்து, அரசியல் நோக்கங்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன”என்றார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தது மோடியின் வித்தை, அது நிறைவேற்றப்படவில்லை என்று அண்மையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon