மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

மிக மோசமான நிலையில் காற்றின் தரம்!

மிக மோசமான நிலையில் காற்றின் தரம்!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் சீர்குலைந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் வாகனப் புகை, ஆலைகள் வெளியிடும் புகை, பனி, வைக்கோல் எரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் சீர்குலைந்துள்ளது. இதனால் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உட்பட பல்வேறு உடல்நலத் தீங்குகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 322ஆக சரிந்துள்ளதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்குறியீட்டில், 322 என்பது மிகவும் மோசமான பிரிவைச் சேர்ந்ததாகும். இக்குறியீடு, சுழியத்துக்கும் 50க்கும் இடையே இருந்தால் நல்லதாகவும், 51க்கும் 100க்கும் இடையே இருந்தால் திருப்திகரமானதாகவும், 101க்கும் 200க்கும் இடையே இருந்தால் மிதமானதாகவும், 201க்கும் 300க்கும் இடையே இருந்தால் மோசமானதாகவும், 301க்கும் 400க்கும் இடையே இருந்தால் மிகவும் மோசமானதாகவும், 401க்கும் 500க்கும் இடையே இருந்தால் கடுமையானதாகவும் கருதப்படுகிறது.

தேசிய தலைநகர் பகுதியில் ஞாயிறு (டிசம்பர் 2) அன்று காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டும் என்று கடந்த வாரத்திலேயே காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன்பின்னர் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்களின் பங்கு 40 விழுக்காடாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், குப்பை எரிப்பு போன்றவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து தரத்தை சீர்குலைத்துவிட்டன

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon