மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ஐஐடிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஐஐடிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

சென்னை ஐஐடியின் நேர்முகத்தேர்வுகளில் ஆட்களை வேலைக்கு எடுப்பதற்காக பல்வேறு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் வந்துள்ளன.

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) முதற்கட்ட வளாக நேர்முகத்தேர்வுகளின் முதல் கூட்டம் நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. இதில், வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கிய ஆறு வேலைவாய்ப்புகள் உட்பட 92 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தில், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பெருநிறுவனங்களும் வேலைக்கு ஆட்களை எடுத்துள்ளனர். முக்கியமாக கன்சல்டிங் துறையில் பெருநிறுவனங்கள் அதிகம் பங்கேற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய மூன்று நிறுவனங்களான மெக்கின்சி, தி பாஸ்டன் கன்சல்டிங் குரூப், பெயின் & கோ ஆகியவை வளாக நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றதாக சென்னை ஐஐடியின் ஆலோசகரான பேராசிரியர் மனு சந்தானம் தெரிவித்துள்ளார். முதற்கூட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களும் 13 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. அதிகபட்சமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 25 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் 7 வேலைவாய்ப்புகளையும், ஆப்பிள் நிறுவனம் 8 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களும் ஆட்களை வேலைக்கு எடுத்துள்ளன. இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வுகளுக்கு மேலும் பல நிறுவனங்கள் வரும் என்று ஐஐடியின் ஆராய்ச்சி விவகார செயலாளரான சுதர்சன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் மே மாதம் வரை இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வுகள் நடைபெறும்.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon