மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

குழந்தை திருமணம்: வேட்பாளருக்கு நோட்டீஸ்!

குழந்தை திருமணம்: வேட்பாளருக்கு நோட்டீஸ்!

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. மக்களுக்கு பலவிதமான வாக்குறுதிகளையும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சோஜத் சட்டசபை தொகுதியின் பெண் வேட்பாளராக போட்டியிடும் பாஜகவின் சோபா சௌகான் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசியபோது, “அதிகாரம் மற்றும் மாநில அரசு எங்கள் பக்கம் உள்ளது. குழந்தை திருமணத்தில் போலீசார் தலையிட அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார். அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் சௌகானின் மனைவிதான் சோபா சௌகான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சோபா சௌகானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

.

இந்திய அளவில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் குறைந்துள்ளபோதும், தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு குழந்தை திருமணம் என்பது கிராமப்புறத்தில் 89.4 சதவிகிதமாகவும் நகர்ப்புறத்தில் 10.6 சதவிகிதமாகவும் உள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon