மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

மழலையர் காப்பகம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்!

மழலையர் காப்பகம்: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்!

பணியிடங்களில் ஊழியர்களின் குழந்தைகளுக்கு மழலையர் காப்பகம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

கடந்த மார்ச்சில், நாடாளுமன்றம் மகளிருக்கான மகப்பேறு பயன்கள் சட்டத் (2017)திருத்தம் கொண்டு வந்தது. இச்சட்டத்திருத்தத்தின்படி, அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறியுள்ளதாவது:

தாய்மைப்பேறு அடையும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 26 வாரங்கள் வரை அளிக்கப்படும். இந்த சட்டமானது 10 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு பொருந்தும். அத்துடன் இந்த சட்டத்தில் 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெண் ஊழியர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள பயிற்சி பெற்ற குழந்தை பராமரிப்பாளரைக் கொண்டு ஒரு மழலையர் காப்பகம் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.

இந்த மழலையர் காப்பகம் பணியிடத்திலோ அல்லது பணியிடத்திலிருந்து 500 மீட்டருக்குள்ளோ இருக்க வேண்டும். பணியிடத்தில் ஊழியர்களின் ஷிப்ட்டுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்படும் மழலையர் காப்பகம் குறைந்தது 10 மணி நேரமாவது செயல்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் 10லிருந்து 12 சதுர அடியாவது விளையாடுவதற்கு இடம் இருக்க வேண்டும். அந்த இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிராக சாக்கடைகளோ, குப்பைத்தொட்டிகளோ இருக்கக் கூடாது.

மழலையர் காப்பகத்தில் ஒரு பாதுகாவலர் கண்டிப்பாக இருக்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு ஒரு பயிற்சி பெற்ற குழந்தை பராமரிப்பாளர் இருக்க வேண்டும் 3வயதுக்கு மேலுள்ள .20 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் மழலையர் காப்பகத்தில் ஒரு குழந்தை பராமரிப்பாளரும் அவருக்கு உதவிட உதவியாளரும் இருக்க வேண்டும். குழாய் பழுது நீக்கும் பிளம்பர்கள்.வாகன ஓட்டுநர்கள்,மின் பழுது பார்ப்பவர்கள் குழந்தைகள் இருக்கும் நேரங்களில் உள்ளே வரக்கூடாது. குழந்தைகள் பாலியல் ரீதியாக முறைகேடாக நடத்தப்படும்போது அது போன்ற சம்பவங்களை விசாரிக்க தனி கமி்ட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon