மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

சந்தையில் பருத்தி வரத்து சரிவு!

சந்தையில் பருத்தி வரத்து சரிவு!

தேவை மந்தம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பருத்தி வரத்து சரிந்துள்ளது.

சந்தையில் பருத்தியின் தேவை இறக்கம் கண்டுள்ளதால், அதன் விலையும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி விலை தொடர்ந்தால், லாபம் கிடைக்காது என்று அஞ்சி பருத்தியை சந்தைப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபடாமல் இருக்கின்றனர். இதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதால் ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் சந்தையில் பருத்தி வரத்து சரிவைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டில் பருத்தி வரத்து 95.09 லட்சம் பேல்களாக இருந்தது. ஆனால் இந்தாண்டில் 31 விழுக்காடு குறைந்து 65.79 லட்சம் பேல்களாக மட்டுமே உள்ளது. தொழிற்சாலைகளிடம் இரண்டு மாதங்களுக்கு தேவையான பருத்தி இருப்பில் இருப்பதால், அதிக விலை கொடுத்து பருத்தி கொள்முதல் செய்ய நிறுவனங்கள் தயங்குவதாக பருத்தி முகவர் ராமானுஜ் தெரிவித்துள்ளார். பருத்தி வரவு சரிவடைந்திருப்பதற்கு இதுவும் காரணமாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் 356 கிலோ எடையுள்ள பருத்தி குறைந்தபட்சமாக 48,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதன் விலை தற்போது குறைந்து ரூ.44,200 முதல் ரூ.48,800க்கு விற்பனையாகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,800 மற்றும் ரூ.5,860க்கும், தெலங்கானாவில் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.5,450க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. 2018-2019 ஆண்டிற்கான பருத்தி உற்பத்தி 361 லட்சம் பேல்களாக இருக்குமென பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon